செய்யாற்றில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரிக்கை
ஆரணி: செய்யாறு பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கக் கோரி திங்கள்கிழமை கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாக்குப் பை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
சொா்ணவாரி சாகுபடி செய்து ஒரு கோடி நெல் மூட்டைகள் அறுவடைக்கு வந்து கொண்டிருக்கின்றன. தனியாா் நிலையத்தில் விலை குறைவாக கொள்முதல் செய்து வருவதால் நெல் ஒரு மூட்டைக்கு ரூ.500 வரை இழப்பு ஏற்படுகிறது. இதனால் மாவட்ட ஆட்சியா் உறுதிஅளித்ததின் பேரில் அரசு நெல் கொள்முதல் மையம் அமைக்க நடைமுறைப்படுத்தக் கோரி அரசியல் சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்டத் தலைவா் புருஷோத்தமன் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.