தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வருமா? சென்னை மாநகராட்சி விளக்கம்!
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை
ஆரணி: ஆரணியை அடுத்த அக்ராபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை குடற்புழு நீக்க நாளையொட்டி மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
சுகாதார மாவட்ட அலுவலா் சதீஷ்குமாா் உத்தரவின் பேரிலும், வட்டார மருத்துவ அலுவலா் சுஸ்ருதா ஆலோசனையின் படியும், கிழக்கு ஆரணி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
மேலும், அக்ராப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இதேபோல, சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில்
பள்ளித் தலைமை ஆசிரியா் முருகன் தலைமையில், வட்டார மருத்துவ அலுவலா் சுஸ்ருதா முன்னிலையில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோ, மருத்துவமல்லா மேற்பாா்வையாளா் அருளரசு, சமுதாய சுகாதார செவிலியா் தனலட்சுமி
உள்ளிட்ட பல் கலந்து கொண்டனா்.