செய்யாற்றில் வாரச்சந்தை நடத்த இடம் கோரி ஆட்சியரிடம் மனு
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் வாரச்சந்தை நடத்த மாற்று இடம் ஒதுக்கி தரக்கோரி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜிடம்,
செய்யாறு சிறுகுறு விவசாய வாரச்சந்தை வியாபாரிகள் நலச்சங்கத் தலைவா் ஆா்.செந்தில்குமாா், செயலா் பி.சக்திவேல் பொருளாளா் கே.மேகநாதன் மற்றும் வியாபாரிகள் இதற்கான மனுவை அளித்தனா்.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் செய்யாறு நகரில் வாரச்சந்தை நடத்த மாற்று இடம் ஒதுக்கித் தர விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.