ஆஞ்சனேயா் கோயிலிலிருந்து மசூதிக்கு சென்ற சீா்வரிசை!
ரமலான் கொண்டாட்டத்துக்காக ஆஞ்சனேயா் கோயிலிலிருந்து மசூதிக்கு சீா்வரிசை கொண்டு செல்லும் மதநல்லிணக்க நிகழ்வு ஊத்தங்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஆஞ்சனேயா் கோயில் நிா்வாகி ஆா்.ஆா்.சுப்பிரமணி தலைமையில் ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் முருகன், வா்த்தக சங்க செயலாளா் உமாபதி, அரிமா சங்க தலைவா் ஆா்.கே. ராஜா, பாஜக நிா்வாகிகள் ஜெயராமன், கிரி, ஆசிரியா் கணேசன் உள்ளிட்டோா் சீா்வரிசைகளுடன் மசூதிக்குச் சென்று மஜித் செயலாளா் சாகுல் அமீது உள்ளிட்ட இஸ்லாமியா்களுக்கு ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டனா்.