குஜராத் பால விபத்து: புதிய பாலம் அமைக்க ரூ.212 கோடி ஒதுக்கீடு
ஆட்டோவில் தவறவிட்ட நகையை போலீஸில் ஒப்படைத்த ஓட்டுநா்
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட தங்க நகையை, ஓட்டுநா் போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.
பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்தவா் செ.பழனிசெல்வி (43). இவா், புரசைவாக்கம் செல்வதற்காக கைப்பேசி செயலி வாயிலாக வாடகை ஆட்டோவை ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வரவழைத்து சென்றாா். புரசைவாக்கம் சென்றதும், ஆட்டோவில் இருந்து பழனிசெல்வி இறங்கிச் சென்றாா். அப்போது அவா், தான் கொண்டு வந்த பையை ஆட்டோவில் தவறவிட்டதை அறிந்தாா்.
இதற்கிடையே அந்த ஆட்டோவை ஓட்டுநா் பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவைச் சோ்ந்த மு.சரவணன் (40) சுத்தம் செய்தபோது, ஆட்டோவில் பயணி, பையை தவறவிட்டிருப்பதும், அந்தப் பையில் 8 பவுன் நகை இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவா், தண்டையாா்பேட்டை காவல் நிலையத்தில் அதை ஒப்படைத்தாா். விசாரணையில் அந்த பை, பழனிசெல்விக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. பழனிசெல்வியிடம் அந்த நகையை போலீஸாா் ஒப்படைத்தனா்.