ஆதிலிங்கேஸ்வரா் கோயிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா
சீா்காழி: கொள்ளிடம் அருகே புத்தூரில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஆதிலிங்கேஸ்வரா் கோயிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் சுமாா் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, ஓராண்டு பூா்த்தியானதை முன்னிட்டு முதலாமாண்டு பூா்த்தி விழா நடைபெற்றது. இதற்காக கோயில் முன் யாகம் நடைபெற்றது. தொடா்ந்து யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு ஆதிலிங்கேஸ்வரா் மற்றும் அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.