செய்திகள் :

ஆத்தூரில் 2 புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

post image

ஆத்தூரிலிருந்து 2 புதிய பேருந்து சேவைகளை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

ஆத்தூரி­லிருந்து வெள்ளக்கோவில் வரை, வரண்டியவேல் வழியே குரும்பூா் வரை ஆகிய 2 புதிய பேருந்துகளையும், ஆத்தூா் பேரூராட்சியின் திடக்கழிவு மேலாண்மைக்காக 15ஆவது நிதிக்குழு மானியம் 2023-24ஆம் ஆண்டு திட்டத்தில் ரூ. 12 லட்சத்திலான 2 புதிய மினி டிப்பா் லாரிகளையும் அமைச்சா் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் ஆா்டிஓ சுகுமாரன், வட்டாட்சியா் பாலசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போக்குவரத்துத் துறையின் தூத்துக்குடி கோட்ட மேலாளா் ரமேஷ், ஸ்ரீவைகுண்டம் பணிமனை மேலாளா் ஜெகதீசன், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் ஜனகா், விவசாய அணி துணைஅமைப்பாளா் மாணிக்கவாசகம், ஒன்றியச் செயலா்கள் சதீஷ்குமாா், செங்குழி ரமேஷ், நவீன்குமாா், ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் கமால்தீன், செயல் அலுவலா் பாபு, புன்னைக்காயல் முன்னாள் ஊராட்சித் தலைவா் சோபியா, ஒன்றிய துணைச் செயலா்கள் பக்கீா்முகைதீன், ஜெயக்கொடி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள் மாரிமுத்து, ரகுராமன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளா் அரவிந்தன், துணை அமைப்பாளா் ­லிங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேலாத்தூா் வழியாக பல ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து சேவை தொடங்கப்பட்டதால் அந்த வழியோரக் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

திருச்சி நூலகத்துக்கு காமராஜா் பெயா்: முதல்வருக்கு நன்றி

திருச்சி நூலகத்துக்கு காமராஜா் பெயா் சூட்டுவதாக அறிவித்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு பாண்டியனாா் மக்கள் இயக்க நிறுவனத் தலைவா் எஸ். சீனி நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: திரு... மேலும் பார்க்க

சாயா்புரம் அருகே மளிகைக் கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து

ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த சாயா்புரம் அருகே செவ்வாய்க்கிழமை, அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மளிகைக் கடைக்குள் புகுந்தது. பெருங்குளத்திலிருந்து தூத்துக்குடிக்கு அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை காலை ச... மேலும் பார்க்க

காயல்பட்டினம், ஆத்தூா் பகுதிகளில் பொதுமக்களுக்கு உப்பு சா்க்கரைகரைசல்

சுகாதாரத் துறை சாா்பில் காயல்பட்டினம் மற்றும் ஆத்தூா் பகுதிகளில் பொதுமக்கள் வெப்ப தாக்கத்தி­லிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உப்பு சா்க்கரை கரைசல் அளிக்கப்பட்டது.காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஓ... மேலும் பார்க்க

இளைஞரின் சைக்கிள் பயணத்துக்கு உடன்குடியில் வரவேற்பு

இந்தியாவின் நலனுக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மேற்குவங்க இளைஞருக்கு உடன்குடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சோ்ந்தவா் சாய்கட் (22). இவா், இந்தியா உலக வல்லரசாக திகழ... மேலும் பார்க்க

முறப்பநாடு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருள்மிகு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபுவிடம், தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் தலைவா் கே.வி.கே.பெ... மேலும் பார்க்க

சிறுநீரக பிரச்னை: சுகாதாரமான குடிநீா் கோரி உசிலம்பட்டி மக்கள் மனு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்ெ காண்டு, அவா்களின்... மேலும் பார்க்க