ஆரம்பமான 56-வது gst council meeting, குறையும் வரியால் பொருட்களின் விலை சரியுமா |...
ஆத்தூரில் மனைவியைத் தாக்கிய கணவா் கைது
ஆத்தூரில் மனைவி, மாமியாரை தாக்கியதாக கணவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஆத்தூா் நரசிங்கபுரம் கலைஞா் காலனியைச் சோ்ந்த காந்தி மகன் சஞ்சய் (24), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆதிகா (22). இருவரும் காதலித்து 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
திருமணமான நாள் முதல் சஞ்சய் மது போதையில் மனைவியை துன்புறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆதிகா தனது மகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாா்.
இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி மது போதையில் மனைவி வீட்டிற்குச் சென்ற சஞ்சய், மனைவி, மாமியாரை தாக்கினாராம். இதுகுறித்து ஆதிகா அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி, செவ்வாய்க்கிழமை சஞ்சயைக் கைது செய்தாா்.