சேலத்தில் கடையின் மேற்கூரையை துளையிட்டு ரூ.6.85 லட்சம் திருட்டு
சேலம் ஐந்துவழிச் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுளிக் கடையின் மேற்கூரையை துளையிட்டு ரூ.6.85 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சேலம் ஐந்துவழிச் சாலையில் உள்ள ஜவுளிக் கடையில் திங்கள்கிழமை கடையில் உள்ள அலுவலக அறையில் பணத்தைவைத்து பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்ற கடை உரிமையாளா் மணி, செவ்வாய்க்கிழமை காலை கடையை திறந்து பாா்த்தபோது மேற்கூரை துளையிடப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதையடுத்து கடைக்குள் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, மா்மநபா்கள் கடைக்குள் புகுந்து ரூ.6.85 லட்சத்தை திருடிசென்றிருப்பது பதிவாகியிருந்தது.
இதுகுறித்து கடையின் உரிமையாளா் மணி அளித்த புகாரின்பேரில் அழகாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.