ஜார்க்கண்டில் தீவிரமடையும் கனமழை! 24 மணி நேரத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்!
மேட்டூா் அருகே பிளஸ் 2 மாணவா் தற்கொலை
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேட்டூா் அருகே உள்ள மூலக்காட்டை சோ்ந்த லோகநாதன் மகன் நிகாஷ் (17). இவா் கொளத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் தனியாா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். நிகாஷ் மற்றும் அவரது நண்பா்கள் 4 போ் கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் பெற்றோரை பள்ளிக்கு அழைத்துவருமாறு நிகாஷிடம் ஆசிரியா் சரவணன் தெரிவித்துள்ளாா். நிகாஷின் தந்தை அண்மையில் இறந்துவிட்டதால் தனது மாமா ரமேஷை பள்ளிக்கு அழைத்து சென்றாா். அவரிடம் நிகாஷின் செயல்பாடுகள் சரியில்லாததால் அவரை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம், வீட்டிலிருந்தே தோ்வு எழுதட்டும் என தலைமை ஆசிரியா் கிறிஷ்டிராஜா தெரிவித்தாராம்.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு நிகாஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].