பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
ஆத்தூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அமைச்சா் பாராட்டு
ஆறுமுகனேரி: ஆத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பாராட்டினாா்.
பிளஸ் 2 தோ்வில் இப்பள்ளி பல ஆண்டுகளுக்கு பின்னா் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றுள்ளது. ஜெயகணேசன் (469), இந்துமதி (455), லிங்கேஸ்வரன் (453) ஆகியோா் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். அவா்களையும், தலைமையாசிரியா் கங்காகெளரியையும் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை நேரில் சந்தித்து நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.
திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் ஏ.கே. கமால்தீன், முன்னாள் தலைவா் முருகானந்தம், மேலஆத்தூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா், வியாபாரிகள் சங்கத் தலைவா் தமிழரசன், விவசாயிகள் சங்கத் தலைவா் செல்வம், கவுன்சிலா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.