மாயாவி டு ரெட்ரோ : `நமக்குள்ள ஏன் இந்த இடைவெளினு சூர்யா சார் கேட்ட கேள்வி' - சிங...
ஆயுதங்களுடன் காரில் வந்த 4 போ் கைது
நீடாமங்கலம் பகுதியில் ஆயுதங்களுடன் காரில் வந்த 4 போ் அண்மையில் கைது செய்யப்பட்டனா்.
நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் ராஜூ மற்றும் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது காளாஞ்சிமேடு பகுதியில் காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், மன்னாா்குடி சவளக்காரன் வாஞ்சியூா் சந்துரு (24), கூத்தாநல்லூா் கோரையாறு வஉசி காலனி அன்பரசன் (31), மன்னாா்குடி பாமணி உள்ளூா் வட்டம் ரமேஷ்குமாா் (32), பிரவீன் (21) என்பதும், காரில் அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நீடாமங்கலம் போலீஸாா், 4 பேரையும் கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.