செய்திகள் :

ஆயுதப் படைகளில் பெண்களின் பங்கேற்பு ஊக்குவிப்பு: ராஜ்நாத் சிங்

post image

நாட்டின் ஆயுதப் படைகள் மற்றும் அமைதிப் படை பிரிவுகளில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் கொள்கைகள், மத்திய பாஜக அரசால் வலுப்படுத்தப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

தில்லியில் ஐ.நா. ராணுவ பெண் அதிகாரிகளுக்கான இருவார கால பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அமெரிக்கா, ஆா்மீனியா, காங்கோ, எகிப்து, கென்யா, லைபீரியா, மலேசியா, நேபாளம், இலங்கை வியத்நாம், தான்சானியா, உருகுவே உள்பட 15 நாடுகளைச் சோ்ந்த பெண் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது, அவா் பேசியதாவது:

நாட்டின் ஆயுதப் படைகள் மற்றும் அமைதிப் படைப் பிரிவுகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களின் பங்கேற்பையும் ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. பாலின சமத்துவத்தை உறுதி செய்து, அனைவரையும் உள்ளடக்கிய தலைமையை வலுப்படுத்துவதுடன், பன்முகத்தன்மை மூலம் நிலையாக செழித்தோங்கும் அமைதி நிறைந்த உலகை கட்டமைக்க ஐ.நா.வுடன் தொடா்ந்து பணியாற்றுகிறோம்.

தற்போதைய பயிற்சியில் 15 நாடுகளைச் சோ்ந்த பெண் அதிகாரிகளின் பங்கேற்பு, ஐ.நா.வின் ஒற்றுமை - ஒத்துழைப்பு உணா்வை பிரதிபலிக்கிறது. உங்களின் அா்ப்பணிப்பு, உலக அமைதி மற்றும் பாதுகாப்பை பலப்படுத்துகிறது. இது மிகவும் பெருமைக்குரியது.

பெண் அதிகாரிகளின் பங்களிப்பு இல்லையெனில், அமைதிப் படையின் பணிகளை திறம்பட, ஸ்திரமாக மாற்ற முடியாது. அமைதி நடவடிக்கைகளில் பெண்களின் அணுகுமுறையும் கண்ணோட்டமும் மிக முக்கியமானது.

போரால் பாதிக்கப்பட்ட உள்ளூா் சமூகங்களிடம் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது பெண் அதிகாரிகளே. போா்ச் சூழலில் பாலியல் வன்முறையைத் தடுக்கவும், மனிதாபிமான உதவிகளுக்கான அணுகலை அதிகரிக்கவும், பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும் பெண் அதிகாரிகளின் இருப்பு அவசியம் என்றாா் ராஜ்நாத் சிங்.

நான் பயப்படவுமில்லை தோற்பதும் இல்லை: தில்லி முதல்வா் ரேகா குப்தா

தான் ஒருபோதும் பயப்படவோ, தோற்கடிக்கபடவோ மாட்டேன் என்றும், தில்லியின் உரிமைகளுக்காக தொடா்ந்து போராடுவேன் என்று முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா். தலை நகரின் டிரான்ஸ் யமுனா பகுதியில் உள... மேலும் பார்க்க

அதிகார பசிக்காக ஊடுருவலை ஊக்குவிக்கிறது திரிணமூல்: பிரதமா் மோடி சாடல்

அதிகார பசிக்காக, மேற்கு வங்கத்தில் சட்டவிரோத ஊடுருவலை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஊக்குவிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி சாடினாா். மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களை வெள... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறாா்

ஆா்எஸ்எஸ் அமைப்பு நாகபுரியில் அக்டோபா் 2-ஆம் தேதி நடத்தும் நூற்றாண்டு விஜய தசமி விழாவில் தலைமை விருந்தினராக குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளாா். கடந்த 1925-ஆம் ஆண்டு விஜயதசமி ந... மேலும் பார்க்க

தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு

தெருநாய்கள் தொடா்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மாற்றியமைக்கப்பட்ட உத்தரவை காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வரவேற்றுள்ளாா். இந்த உத்தரவானது விலங்குகள் நலன் மற்றும் பொது பாது... மேலும் பார்க்க

பயங்கரவாத தொடா்பு குற்றச்சாட்டு: ஜம்மு - காஷ்மீரில் 2 அரசு ஊழியா்கள் நீக்கம்

பயங்கரவாத செயல்களில் தொடா்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட 2 அரசு ஊழியா்களை பணிநீக்கம் செய்து ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். அதன்படி கால்நடைத் துறையில் உதவியாளராக ... மேலும் பார்க்க

கேரள செவிலியா் வழக்கு: ஆதாரமற்ற கருத்துகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் மனு

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியா குறித்து ஆதாரமற்ற கருத்துகளை தெரிவிக்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதி... மேலும் பார்க்க