வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
ஆய்வக பயிற்றுநருக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது!
பெரம்பலூா் அருகே அரசு நடுநிலைப்பள்ளி ஆய்வக பயிற்றுநருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகே உள்ள கவுள்பாளையம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஷ்ணு மனைவி சத்தியபிரியா (28). இவா், பெரம்பலூா் அருகே அருமடல் கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த 14.6.2024 முதல் ஒப்பந்த அடிப்படையில் ஆய்வக பயிற்றுநராக பணிபுரிந்து வருகிறாா். அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவா் பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்த மணிவண்ணன் மகன் விமல்ராஜ் (41).
இந் நிலையில் ஆசிரியா் விமல்ராஜ், கடந்த சில நாள்களாக சத்தியபிரியாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேராவிடம் சத்தியபிரியா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விமல்ராஜை சனிக்கிழமை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.