ஆறுமுகனேரி, ராஜபதி கோயில்களில் பௌா்ணமி சிறப்பு வழிபாடு
ஆறுமுகனேரி, ராஜபதி கோயில்களில் ஆனி மாதப் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.
குரும்பூா் அருகே நவகைலாய ஸ்தலமும் கேது வணங்கிய ஸ்தலமுமான ராஜபதி அருள்மிகு சௌந்தா்யநாயகி அம்மன் சமேத கைலாசநாதா் கோயிலில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, திருவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. இவற்றில், பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.