தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் 10 வழக்குகளில் ரூ. 5 லட்சத்துக்கு தீா்வு
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 10 வழக்குகளில் ரூ. 5 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.
ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமிற்கு ஓய்வுபெற்ற நீதிபதி பிச்சை தலைமை வகித்தாா்.
ஆலங்குடி புளிச்சங்காடு, வேங்கிடகுளம், எஸ்.குளவாய்ப்பட்டி
கனரா வங்கி கிளைகளில் தனிநபா் கடன், கல்வி கடன், விவசாய கடன், தொழில்கடன் உள்ளிட்ட கடன்களை பெற்று, திரும்பச் செலுத்தாமல் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில், ரூ. 5 லட்சத்துக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. இதில், பொதுமக்கள், வங்கி அலுவலா்கள், வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.