அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று திருச்சி பயணம்
ஆளுநா் ஆா்.என்.ரவி ஒரு நாள் பயணமாக சனிக்கிழமை திருச்சி செல்கிறாா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி திருச்சியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி உரை நிகழ்த்துகிறாா்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறாா். அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு அன்று மாலை சென்னை திரும்புகிறாா்.