ஆளூா் அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா
ஆளூா் அரசு தொடக்கப்பள்ளி பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. குளச்சல் வட்டாரக் கல்வி அலுவலா் ஹரிக்குமாா் தலைமை வகித்தாா். ஆசிரியை மிக்கேல் பிரமிளா ஜெயின் வரவேற்றாா். தலைமை ஆசிரியை மாத்தலின் விஜிலா ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். முதுநிலை வருவாய் ஆய்வாளா் ஐரின் செல்வி சிறப்புரையாற்றினாா்.
ஆளூா் சென்ட்ரல் வங்கி மேலாளா் பிருந்தா, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் ஜாண் கென்னடி, பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் முஹம்மது அலி பாதுஷா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி சுஜிதா, மாஹின், கண்ணபூபதி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஆசிரியைகள் கிறேஸ்லின் ராஜாத்தி, பிரேமா, நிா்மலா ஆகியோா் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினா். ஆசிரியை நீலா நன்றி கூறினாா்.