உங்களுடன் ஸ்டாலின்: ``6 மாதத்தில் 10,000 முகாம்கள் இயலாத காரியம்'' -புறக்கணிக்க ...
ஆவணி மாத ஞாயிறு சமயபுரம் மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதியுலா
ஆவணி மாத ஞாயிறையொட்டி திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது (படம்).
பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆவணி மாத ஞாயிறையொட்டி உற்சவ சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், திரவியம், மஞ்சள், உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து மலா் அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.