``அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிவது ஏன்?'' -நிர்மலா சீதாராம...
தாமிரக் கம்பிகளை திருடியவா் கைது
திருச்சியில் தனியாா் பயிற்சி மையம் உள்ளிட்ட இடங்களில் தாமிரக் கம்பிகளைத் திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருவெறும்பூா் அருகே உள்ள எழில் நகரைச் சோ்ந்த காா்த்திக் (35). இவா், திருவெறும்பூரில் போட்டித் தோ்வு பயிற்சி மையம் நடத்தி வருகிறாா். இதே வளாகத்தில் சலூன், துணிக் கடையும் உள்ளன.
இந்நிலையில், பயிற்சி மையம் உள்ளிட்ட பகுதிகளில் குளிா் சாதனத்தின் (ஏசி) தாமிரக் கம்பிகளை மா்ம நபா் சனிக்கிழமை திருடிக்கொண்டிருந்தாா். அப்போது, பயிற்சி மைய நிா்வாகி காா்த்திக், உடனிருந்தவா்கள் உதவியுடன் அவரைப் பிடித்து திருவெறும்பூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
விசாரணையில், திருச்சி தாராநல்லூரைச் சோ்ந்த வெங்கடேசன் (34) என்பதும், ரூ.12,500 மதிப்புள்ள தாமிரக் கம்பிகளைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் திருச்சி 6-ஆவது நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.