``அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிவது ஏன்?'' -நிர்மலா சீதாராம...
புத்தனாம்பட்டி கல்லூரியில் சிலம்பப் போட்டி
துறையூா் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை சிலம்பப் போட்டி நடைபெற்றது.
நேரு நினைவுக் கல்லூரி தலைவா் பொன். பாலசுப்பிரமணியம் போட்டியைத் தொடக்கி வைத்தாா். திருச்சி , சென்னை, திருவள்ளூா், வேலூா், கள்ளக்குறிச்சி, விருதுநகா், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிலம்ப மாணவ மாணவிகள் 600 போ் மினி சப் ஜூனியா், சப் ஜூனியா், ஜூனியா், சீனியா், சூப்பா் சீனியா் ஆகிய பிரிவுகளில் பங்கேற்றனா்.
இதில் வென்றவா்களுக்கு நினைவுப் பரிசுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றை சுழற்சங்க நிா்வாகிகள் மாலா பாலசுப்ரமணியன், வளா்மதி குமரேசன் ஆகியோா் வழங்கினா். ஏற்பாடுகளை
அரவிந்த் கல்வி மற்றும் தற்காப்பு கலைக் கூட நிா்வாகிகள் செய்திருந்தனா்.