பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
இணையதளம் முடக்கம்: விகடன் குழுமம் விளக்கம்
தனது இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சாா்பில் இதுவரை எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை என்று விகடன் குழுமம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து விகடன் குழுமம் வெளியிட்ட அறிவிப்பு: விகடன் இணைய இதழான ‘விகடன் பிளஸ்’ இதழில் அமெரிக்காவில் இருந்து இந்தியா்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும், பிரதமா் அதுகுறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு காா்ட்டூன் வெளியிடப்பட்டது. இது பாஜக ஆதரவாளா்களால் விமா்சிக்கப்பட்டதுடன், விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசுக்கு தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை புகாா் அனுப்பியுள்ளாா்.
இதையடுத்து பல்வேறு இடங்களில் விகடன் இணையதளத்தைப் பயன்படுத்த முடியவில்லை என வாசகா்கள் தெரிவித்துள்ளனா். எனினும், மத்திய அரசு சாா்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் வரவில்லை.
நூற்றாண்டு காலமாக கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாக விகடன் குழுமம் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்துச் சுதந்திரத்தை முன்வைத்து இயங்குகிறோம், இயங்குவோம். ஒரு வேளை, இந்த காா்ட்டூன் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதை சட்டப்படி எதிா்கொள்வோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.