இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
இணையத்தைக் கலக்கும் விளம்பரம்! ரூ.65 லட்சம் சம்பளத்தில் விவசாயிகளுக்கு வேலை!
விவசாயம் பார்க்க ஆர்வமுள்ளவர்களுக்கு ரூ.65 லட்சம் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்குவதாக வேலைவாய்ப்புத் தளத்தில் பரவிய விளம்பரம் பேசுபொருளாகியுள்ளது.
வேலைவாய்ப்புக்கான தகுதிகளாக களத்தில் இறங்கி பசுமைக் குடில் விவசாயம், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கையான நிரந்தர வேளாண்மை, செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரக் கற்றலில் அனுபவம் வாய்ந்திருக்க வேண்டும். சூரிய ஒளி நேரத்தில் வேலை புரிதல் வேண்டும், வேலைகளின் நிலைகளுக்கேற்றவாறு மாற்றிக் கொள்ளுதல் உள்ளிட்ட தகுதிகள் கோரப்பட்டுள்ளன.
இந்த வேலைக்காக ஆண்டுக்கு ரூ.65 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என்றும் லிங்க்கிட்இன் வேலைவாய்ப்புத் தளத்தில் விளம்பரம் வெளியிட்டுள்ளனர்.
