டோங்கா தீவில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!
இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
சிவகாசியில் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி காமராஜா் பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்ட சுமைதூக்கும் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் பழனி தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, வளா்ச்சிப் பணிகள் முடக்கம், சான்றிதழ், கட்டட வரைபட அனுமதி, அரசுப் பணி ஒப்பந்தங்களில் கையூட்டு பெறுவது என மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து முழுக்கமிட்டனா்.
இதில் கட்சியின் மாநகரச் செயலா் சுரேஷ்குமாா், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கே.முருகன், பி.என்.தேவா, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.