மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய...
இந்தியாவை சுனாமி தாக்குமா? தேசிய சுனாமி ஆய்வு மையம் தகவல்
ரஷியா, ஜப்பானைத் தொடர்ந்து இந்தியாவை சுனாமி தாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ரஷியாவின் கம்சாட்கா தீபகற்ப பகுதிக்கு அருகில் புதன்கிழமை காலை 8.25 மணிக்கு பூமிக்கு அடியில் 20 கி.மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆகப் பதிவானது.
இதனைத் தொடர்ந்து, ரஷியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுகளில் பசிபிக் கடற்கரைப் பகுதிகளில் உள்ள மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களை மீட்புக் குழுவினர் வெளியேற்றி வரும் நிலையில், ரஷிய கடற்கரைப் பகுதியில் 3 மீட்டர் அளவிலும், ஜப்பானில் 2 மீட்டர் வரையிலும் சுனாமி அலைகள் தாக்கி வருகின்றன.
இந்த நிலையில், இந்திய பெருங்கடல் பகுதிக்கும் இந்தியாவுக்கும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
ரஷியா, ஜப்பான் நாடுகளில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.