இனயம் புத்தன்துறை ஊராட்சியில் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்க வலியுறுத்தல்
இனயம் புத்தன்துறை ஊராட்சியில்முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுதிட்டத்தில் விண்ணப்பிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ காப்பீடு அட்டை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு மீனவா் காங்கிரஸ் தலைவா் ஜோா்தான் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: கிள்ளியூா் ஒன்றியத்திற்குள்பட்ட இனயம் புத்தன்துறைஊராட்சி அலுவலகத்தில் கடந்த டிசம்பா் மாதம் முதமைச்சரின் விரிவான மருத்துவகாப்பீடுதிட்டத்திற்கான முகாம் நடைபெற்றது.
அப்போது ஊராட்ச்சிக்குள்பட்ட 500 க்கும் மேற்பட்டோா்புகைப்படம்ஒட்டிய ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தனா்.இரண்டு தினங்களுக்குள் இதற்கானஅடையாள அட்டை கிடைக்கும் என உறுதியளித்தனா். ஆனால்,இந்நாள்வரை அடையாள அட்டை வழங்கவில்லை. இதனால்,இப்பகுதிமீனவா்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனா். எனவே,மாவட்ட ஆட்சியா் தலையிட்டுஇந்த ஊராட்சியில் காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.