சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக ஈஷா பவுண்டேஷனுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு: தமி...
இயக்குநராக 3, நடிகராக 50..! பாசில் ஜோசப் பேட்டி!
பிரபல மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் நல்ல படங்களை தயாரித்து இயக்கவே நடிப்பதில் கவனம் செலுத்துவதாகக் கூறியுள்ளார்.
கோதா, மின்னள் முரளி படங்களின் மூலம் மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக அறியப்படுபவர் பாசில் ஜோசப். இயக்குநராக மட்டுமில்லாமல் தற்போது முன்னணி நடிகராக முன்னேறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான சூக்ஷமதர்ஷினி, பொன்மான் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
![](https://media.assettype.com/dinamani/2025-02-14/ba5wh0dl/GjBrAjIWkAA1QWk.jpeg)
இதுவரை 3 படங்களை மட்டுமே இயக்கியுள்ள பாசில் ஜோசப் 50 படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இயக்குநராக அதிக நேரம் வீணாகிறது
துணை நடிகராகத்தான் நான் சினிமா வாழ்க்கையை தொடங்கினேன். நண்பரது படமொன்றில் நடித்தேன். அந்தப் படம் கவனம் பெறவே அடுத்தடுத்த படங்களில் தேர்வானேன்.
இயக்குநராக எனக்கு பொருளாதார பிரச்னை இருக்கக் கூடாதென்பதாலயே நான் நடிக்கத் தொடங்கினேன். இயக்குநராக நடிகருக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது.
நீங்கள் கதை எழுத வேண்டும். பின்னர் காத்திருக்க வேண்டும். தற்போது அந்தப் பகுதிகள் என்னுடைய நடிப்பினால் ஈடுசெய்யப்பட்டு வருகின்றன.
நடிப்பை விட இயக்கமே பிடிக்கும்
எனது படங்களுக்காக காத்திருக்கும்போது நான் என்னுடைய சொந்த கால்களில் நிற்க முயல்கிறேன். அடுத்த இலக்கு அடுத்த இலக்கு என ஓட முடியாது.
நடிகராக இருப்பதால் எனக்கு எப்போது வசதியோ அப்போது படத்தை இயக்குவேன். நடிகராக நான் கூடுதல் முயற்சிகளை எடுத்து வருகிறேன்.
ஆனால், எனக்கு எப்போதுமே நடிப்பை விட படத்தினை இயக்குவதுதான் பிடிக்கும் என்றார்.