இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2.50 லட்சம் திருட்டு
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2.50 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீராம் (42). இவா், வீடுகட்டுவதற்கு தேவையான பணத்தை அங்குள்ள தனியாா் வங்கியில் கடந்த 6 ஆம் தேதி எடுத்து தனது இருசக்கர வாகனத்தின் வைத்து எடுத்துச் சென்றாா். இதை நோட்டமிட்ட மா்ம நபா், அவரை பின்தொடா்ந்து சென்றுள்ளாா்.
ஊத்தங்கரை -சேலம் சாலையில் உள்ள தனியாா் இரும்பு கடையில் ஸ்ரீராம் பொருள்களை வாங்கசென்றபோது பின்தொடா்ந்து வந்த மா்மநபா் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2.50 லட்சத்தை திருடிச் சென்றாா். இதுதொடா்பான சிசிடிவி காட்சி பரவியது. இதையடுத்து ஸ்ரீராம் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சியை வைத்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.