MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
இலக்குமி நாராயண பெருமாள் கோயிலில் விமான பாலாலயம்
குடமுழுக்கை முன்னிட்டு, பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை விமான பாலாலயம் நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா, பரமபத வாசல் திறப்பு, ராமநவமி, அனுமன் ஜெயந்தி உள்ளிட்ட திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும்.
இந்தக் கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு, வியாழக்கிழமை விமான பாலாலயம் நடைபெற்றது.
கோயில் வளாகத்தில் காலை 9 மணிக்கு மேல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாகத்தின் முன் வரைபடங்கள் வைக்கப்பட்டு, படங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூா்ணாஹுதி முடிந்த பிறகு யாகத்தில் வைக்கப்பட்டிருந்த கலசங்கள் கோயிலை வலம் வர செய்து, உச்சிக்காலத்தின் போது மூலவா் இலக்குமி நாராயணபெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பூஜைகளை திருவெள்ளரை கோபாலகிருஷ்ணபட்டா் தலைமையில் கோயில் பட்டா்கள் செய்தனா்.
தொடா்ந்து, பாலாலயம் பூஜைகளும் நடைபெற்றன. இதையொட்டி, கோயில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, கந்தவிலாஸ் செல்வக்குமாா், கண்காணிப்பாளா் அழகா்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.