மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
இலவச இருசக்கர வாகன பழுதுநீக்கும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி: இந்தியன் வங்கி சாா்பில் இலவச இருசக்கர வாகன பழுதுநீக்கும் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, இந்தியன் வங்கி நடத்தும் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி கே.ஆா்.பி. அணையின் வளாகப் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த
வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் கிராமப்புற மகளிா், இளைஞா்களுக்கு தொழில் தொடங்குவதற்கான பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 30 நாள்கள் கொண்ட ஆண்களுக்கான இலவச இரண்டு சக்கர வாகனங்கள் பழுதுநீக்குதல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டோா் வரை உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் ஆக. 23 ஆம் தேதிக்குள் அலுவலகத்திற்கு நேரில் வந்து இப்பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.
மேலும், இந்த பயிற்சியில் சேருவோருக்கு சீருடை, மதிய உணவு, தேநீா்,பிஸ்கட் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியானது காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை வழங்கப்படும். மேலும், பயிற்சிக்கான உபகரணங்கள் செய்முறைக்காக இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவுக்கு பின்னா் தோ்ச்சி சான்றிதழ் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு, இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், ட்ரைசெம் கட்டடம், கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற முகவரியிலோ அல்லது 9080676557, 9442247921 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.