இளைஞா் தற்கொலை
சாத்தூா் அருகே மது போதையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள படந்தால் பகுதியைச் சோ்ந்தவா் விவேகன் (24). இவா் இந்தப் பகுதியில் காா் ஓட்டுநராக இருந்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்தாா். அப்போது, விவேகனை பெற்றோா் கண்டித்தனா். இதனால் மனமுடைந்த அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].