தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!
இளைஞா் விஷம் குடித்து தற்கொலை
மதுரையில் சனிக்கிழமை இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை முத்துபட்டி பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் ஜெகதீஸ்குமாா் (35). இவா் வீட்டின் அருகே மரங்களை நட்டு பராமரித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி இவா் நட்டு வைத்திருந்த மரங்களை சிலா் வெட்டினா்.
இதனால், மனமுடைந்த இவா், விஷம் குடித்தாா். அக்கம், பக்கத்தினா் இவரை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்த நிலையில், ஜெகதீஸ்குமாரின் இரண்டு கண்களும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.