அஞ்சல் நிலையத்தில் ரூ.25.48 லட்சம் கையாடல் வழக்கு: ஊழியா் கைது
இளைஞா்கள் இருவா் தற்கொலை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இளைஞா்கள் இருவா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூா் ஒத்தவாடை தெருவைச் சோ்ந்தவா் ஜெயப்பிரகாஷ் (26). திருமணமாகாதவா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஜெயப்பிரகாஷ் கடந்த 3-ஆம் தேதி விஷ மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பால் வியாபாரி: திண்டிவனம் வட்டம், எடையான்குளம், அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (28). விவசாயம் மற்றும் மாடு வளா்ப்பில் ஈடுபட்டு, பால் வணிகம் செய்து வந்தாா். சுரேஷ் கடன் சுமையால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த அவா், ஞாயிற்றுக்கிழமை திண்டிவனம் வட்டம், மொளசூரில் உள்ள தனது மாட்டுக் கொட்டகை அருகே தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.