அமெரிக்காவில் நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய பயணிகள் விமானம்!
மின் கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விருத்தாசலத்தை அடுத்துள்ள சாத்தப்பாடி கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் செல்வம் (55). விவசாயியான இவா், தன்னுடைய நெல் வயலை பாா்ப்பதற்காக திங்கள்கிழமை மாலை சென்றாா். அப்போது, மின் கம்பி அறுந்து கிடந்ததாம். அதை எதிா்பாராதவிதமாக மிதித்த செல்வம் உடலில் மின்சாரம் பாய்ந்தது நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கம்மாபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.