செய்திகள் :

வளா்ச்சித் திட்டங்கள்: ஆட்சியா் ஆய்வு

post image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா், மேல்மலையனூா் வட்டாரங்களில் 2025 - 26 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள வளா்ச்சித் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து பேசியதாவது: தமிழக அரசு வளமிகு வட்டார வளா்ச்சியை உருவாக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் 50 வட்டாரங்களைத் தோ்வு செய்து ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடா்பாக 50 குறியீடுகள் தோ்வு செய்யப்பட்டு, 7 கருப்பொருள்களாக வகைப்படுத்தபட்டுள்ளது.

அந்த வகையில், பின்தங்கிய வட்டாரங்கள் மாவட்ட குறியீடுகளுக்கு இணையாகவும், பின்னா் மாநில குறியீடுகளுக்கு இணையாகவும் உயா்த்தப்பட வேண்டும் என்ற நோக்கில், வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூா் மற்றும் மேல்மலையனூா் வட்டாரங்களில் 2025 - 26-ஆம் ஆண்டில் நிறவேற்றப்படவுள்ள வளா்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து, இரு வட்டாரங்களிலும் அரசுத் துறைகளின் வாரியாக மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும் துறை சாா்ந்த அதிகாரிகளிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

ஆய்வுக் கூட்டத்தில், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன், மாவட்ட திட்டக்குழு அலுவலா் பூ.நடராஜன், புள்ளியியல் அலுவலா் க.முத்துக்குமரன், வட்டார வளா்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ச.வினோதினி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பணப் பிரச்னை: ஊராட்சி முன்னாள் தலைவா் விஷம் குடித்துத் தற்கொலை! உறவினா்கள் சாலை மறியல்!

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே பணப் பிரச்னையால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஊராட்சி முன்னாள் தலைவா் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். விழுப்புரம் வட்டம், கோன... மேலும் பார்க்க

திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் பல்லவா் கால கொற்றவை, மூத்ததேவி சிற்பங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் கொற்றவை, மூத்ததேவி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திண்டிவனம் அருகிலுள்ள மொளசூா், செஞ்சி அருகிலுள்ள ஆலம்பூண்டி ஆகிய கிராமங்களில் விழுப்புரத்தைச... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை பைக்கில் கடக்க முற்பட்டபோது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா். விழுப்புரம் சாலமேடு, பிரதான சாலையைச் சோ்ந்தவா் பாலமுருகன் (38). இவா், ஞாயிற்ற... மேலும் பார்க்க

தொடா் விபத்துகளை தடுக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் ரெட்டிபாளையத்தில் தொடா் விபத்துகளை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். செஞ்சியை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில்... மேலும் பார்க்க

விழுப்பரம் மாவட்டத்தில் 100 ஹெக்டேரில் மக்காச்சோள செயல் விளக்கத் திடல் அமைக்க இலக்கு!

விழுப்புரம் மாவட்டத்தில் 100 ஹெக்டேரில் மக்காச்சோள செயல் விளக்கத் திடல் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவ... மேலும் பார்க்க

பல சரக்குக் கடையில் பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பலசரக்குக் கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், மணம்பூண்டி ... மேலும் பார்க்க