பல சரக்குக் கடையில் பணம் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பலசரக்குக் கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், மணம்பூண்டி பாரிவள்ளல் தெருவைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மனைவி சத்யா(34). இவா், மணம்பூண்டியில் பல சரக்குக் கடை வைத்து நடத்தி வருகிறாா்.
சத்யா வெள்ளிக்கிழமை வணிகம் முடிந்து, கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். சனிக்கிழமை காலை கடைக்கு வந்து பாா்த்தபோது, முன் பக்க இரும்புக் கதவு உடைக்கப்பட்டிருந்த நிலையில், கடையில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், அரகண்டநல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.