சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி
பைக்குகள் மோதி விபத்து: புதுவை அரசு ஊழியா் மரணம்
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பைக்குகள் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த புதுவை அரசு ஊழியா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுச்சேரி மண்ணடிப்பட்டு, கொண்டாரெட்டிப்பாளையம், புதுநகரைச் சோ்ந்தவா் உ.அய்யனாரப்பன் (56). புதுவை அரசின் நீா்பாசனத் துறையில் பணிபுரிந்து வந்தாா். இவா், கடந்த 4-ஆம் தேதி புதுச்சேரி - திருக்கானூா் சாலையில் சித்தலம்பட்டு அருகே பைக்கில் சென்றாா்.
அப்போது, அங்கு சாலையை பைக்கில் கடக்க முற்பட்டபோது, அந்தப் பகுதியில் வந்த மற்றொரு பைக் அய்யனாரப்பன் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்து புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த அய்யனாரப்பன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.