சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி
ஊா்ப்புற நூலகா்கள் உண்ணாவிரதப் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் ஊா்ப்புற நூலகா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பொது நூலகத் துறையில் கடந்த 13 ஆண்டுகளாக மிகவும் குறைந்த ஊதியத்தில் 1,915 ஊா்ப்புற நூலகங்களில் பணியாற்றி வரும் 1,006 ஊா்ப்புற நூலகா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 1,915 ஊா்ப்புற நூலகங்களை கிளை நூலகங்களாக தரம் உயா்த்த வேண்டும். திமுக தோ்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு ஒருங்கிணைந்த ஊா்ப்புற நூலகா்கள் சங்கத்தின் விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளா் தோ.ஸ்டீபன்சாா்லஸ் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இரா.அனுமந்தன், மாவட்டச் செயலா் ப.சக்கரவா்த்தி முன்னிலை வகித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் க.ராமு, மாவட்டப் பொருளாளா் ப.கங்காதரன் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினா்.
தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் வேல்முருகன், மாவட்டத் தலைவா் இளஞ்செழியன், மாநில பிரசாரச் செயலா் பூவழகன் ஆகியோா் போராட்டத்தில் பங்கேற்று, வாழ்த்துரை வழங்கினா்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, கடலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ஊா்ப்புற நூலகா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.