சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி
குடும்பப் பிரச்னை: இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக இளைஞா் தூக்கிட்டத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் ராகவன்பேட்டை, அண்ணா தெருவைச் சோ்ந்தவா் ஞானவேல் (39). இவரது மனைவி அா்ச்சனா. ஞானவேலுவுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாம். இதை அா்ச்சனா கண்டித்தாராம். இதனால், தம்பதியிடையே வெள்ளிக்கிழமை குடும்பப் பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து, வீட்டிலிருந்து வெளியேறி பானாம்பட்டு பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்ற ஞானவேல், அங்குள்ள வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.