செய்திகள் :

இளையராஜாவுக்கு செப்.13ல் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா!

post image

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வரும் செப். 13 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

இசையமைப்பாளா் இளையராஜா மேற்கத்திய - கர்நாடக இசை கலந்த ‘வேலியண்ட்’ பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சியை லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் கடந்த மார்ச் 8-ஆம் தேதி அரங்கேற்றினார்.

லண்டனில் இருந்து இளையராஜா திரும்பியபோதே, அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் விதமாக தமிழக அரசு தரப்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை சிறப்பிக்கும் விதமாக, செப். 13 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு விழா நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் மூத்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர். மேலும் வெளிநாட்டு இசைக்கலைஞர்களின் இசைக் கச்சேரி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி திரையுலகைச் சேர்ந்தவர்களும் இளையராஜாவுக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கணவரை அறிமுகப்படுத்தினார் கிரேஸ் ஆண்டனி..! யார் இந்த அபி டாம் சிரியாக்?

பிரபல மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி தனது கணவரின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். தொடக்கத்தில் கணவரைக் குறிப்பிடாமல் பதிவிட்ட கிரேஸ் ஆண்டனி தற்போது கணவரை டேக் செய்து பதிவிட்டுள்ளார். கேரளத்தைச் சேர்ந்த கிர... மேலும் பார்க்க

கவினின் கிஸ் பட டிரைலர்!

கவின் நடிப்பில் உருவாகியுள்ள கிஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.2.36 நிமிடம் கொண்ட கிஸ் படத்தின் டிரைலர் இளம் ரசிகர்களை கவரும் வகையில் உருவாகியுள்ளது. நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் ப்ரீ... மேலும் பார்க்க

ரவி மோகன் இயக்கும் முதல் படம்: புரோமோ தேதி அறிவிப்பு!

இயக்குநர் ரவி மோகனின் முதல் திரைப்படமான ’ஆன் ஆர்டினரி மேன்’ என்ற படத்தின் புரோமோ நாளை (செப்.10) வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் ரவி மோகன் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் புரோமோ வெளி... மேலும் பார்க்க

படப்பிடிப்புக்கு முன்பே 70% பின்னணி இசையை முடித்த ஸ்பிரிட் படக்குழு!

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் படத்தின் பின்னணி இசை 70 சதவிகிதம் முடிந்ததாக இயக்குநர் சந்தீப் வங்கா தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்காத நிலையில் இந்த அறிவிப்பு ... மேலும் பார்க்க

காலித் ஜமில் தலைமையில் இந்திய கால்பந்தின் புதிய சகாப்தம்!

இந்திய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் காலித் ஜமில் தலைமையில் புதிய சாதனைகள் நிகழ்ந்து வருகின்றன. காஃபா நேஷன்ஸ் தொடரில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது. இந்திய கால்பந்து அணிக்கு 20... மேலும் பார்க்க

கிரேஸ் ஆண்டனிக்குத் திருமணம்! மணமகனின் அடையாளம் குறிப்பிடவில்லை!

பிரபல மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனிக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. யார் மணமகன் என்பதைக் குறிப்பிடாமல் அவர் பதிவிட்டது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளத்தைச் சேர்ந்த கிரேஸ் ஆண்டனி (28 வயது)... மேலும் பார்க்க