செய்திகள் :

காலித் ஜமில் தலைமையில் இந்திய கால்பந்தின் புதிய சகாப்தம்!

post image

இந்திய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் காலித் ஜமில் தலைமையில் புதிய சாதனைகள் நிகழ்ந்து வருகின்றன.

காஃபா நேஷன்ஸ் தொடரில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது.

இந்திய கால்பந்து அணிக்கு 2005-க்குப் பிறகு கடந்த ஆகஸ்டில் முழுநேர பயிற்சியாளராக காலித் ஜமில் நியமிக்கப்பட்டார்.

காஃபா (சிஏஎஃப்ஏ) நேஷன்ஸ் கோப்பைக்கான 35 பேர்கொண்ட இந்திய அணியை தேர்வு செய்ததிலேயே இவர் தனது அதிரடியான முடிவுகளுக்குப் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கான இந்தியா - ஓமன் அணிகள் மோதிய ஆட்டம் முதலில் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.

வெற்றியாளரைத் தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் இந்தியா 3-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு ஃபிஃபா உலகக் கோப்பை தனது வாழ்த்துகளை இந்திய அணிக்குத் தெரிவித்துள்ளது.

காலித் ஜமில் தலைமையில் முதல் தொடரிலேயே இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.

இந்தத் தொடரில் முதல் போட்டியில் தஜிகிஸ்தானை 17 ஆண்டுகளுக்குப் பிறகு வீழ்த்தி சாதனை படைத்தது.

நேற்றைய போட்டியில் ஓமனை இந்திய அணி முதல்முறையாக வென்று மற்றுமொரு வரலாறு படைத்தது.

அடுத்ததாக 2027 ஆம் ஆண்டுக்கான ஏஎஃப்சி ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.

அடுத்த மாதம் அக்.9, அக்.11-இல் சிங்கப்பூருடன் இந்திய அணி மோதவிருக்கிறது.

New achievements are being achieved under the leadership of the Indian football team's head coach Khalid Jamil.

ஃபஹத் ஃபாசில் - பிரேம் குமார் கூட்டணியில் புதிய படம்!

இயக்குநர் பிரேம் குமார் நடிகர் ஃபஹத் ஃபாசில் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் கு... மேலும் பார்க்க

விஜய் ஆண்டனி - சசி படத்தின் பெயர்!

நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநர் சசி கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனிக்கு நடிகராகப் பெரிய வெற்றியைக் கொடுத்த திரைப்படம் பிச்சைக்காரன். இய... மேலும் பார்க்க

30 நாடுகளில் வெளியாகும் காந்தாரா முதல் பாகம்!

காந்தாரா சாப்டர் 1 படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி இயக்கத்தில், 2022 ஆம் ஆண்டில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த காந்தாரா படத்தின் முதல் பாகம்,... மேலும் பார்க்க

சாத்விக்/சிராக் இணை வெற்றி

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி கூட்டணி 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறியது.500 புள்ளிகள் கொண்ட இந்தப் போட்டியில், ஆடவா் இரட்டைய... மேலும் பார்க்க

இந்திய கலப்பு அணிகள் ஏமாற்றம்

சீனாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான சா்வதேச சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பை போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா்கள் சோபிக்காமல் போயினா்.10 மீட்டா் ஏா் ப... மேலும் பார்க்க

வெண்கலப் பதக்கச் சுற்றில் மகளிா் அணி

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.தீபிகா குமாரி, கதா கடாகே, அங்கிதா பகத் ஆகியோா் அடங... மேலும் பார்க்க