படப்பிடிப்புக்கு முன்பே 70% பின்னணி இசையை முடித்த ஸ்பிரிட் படக்குழு!
தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் படத்தின் பின்னணி இசை 70 சதவிகிதம் முடிந்ததாக இயக்குநர் சந்தீப் வங்கா தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்காத நிலையில் இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய இயக்குநராக அறியப்படும் சந்தீப் வங்கா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் ஸ்பிரிட் எனும் படத்தில் நடிக்கிறார்.
அனிமல் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு சந்தீப் இயக்கும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஸ்பிரிட் படம் நீண்ட நாள்களாகவே முன் தயாரிப்பு பணிகளில் இருக்கின்றன.
இந்நிலையில், ஜகதீஷ் பாபுவின் நேர்காணல் ஒன்றில் சந்தீப் ஸ்பிரிட் படம் குறித்து பேசியதாவது:
70% பின்னணி இசை முடிந்தது
எனக்கு எப்போதும் படப் பிடிப்புக்கு முன்பாகவே பின்னணி இசையை கேட்டு வாங்கிவிடுவேன். ஏனெனில், அது கிடைத்துவிட்டால் ஒரு ஆறு ஏழு நாள்களை நம்மால் முன்னதாகவே முடிக்க முடியும்.
ஸ்பிரிட் படத்திற்கான பின்னணி இசையும் ஒரு எழுபது சதவிகிதம் முடிந்துவிட்டன.
நடிகர் பிரபாஸ் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் எளிமையாகப் பழகுகிறார். விரைவில் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம் என்றார்.
பிரபாஸின் தி ராஜா சாப் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.