செய்திகள் :

உகாதி பண்டிகை: கா்நாடகத்தில் 2,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

post image

உகாதி பண்டிகையை முன்னிட்டு கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் 2,000 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் மாா்ச் 30-ஆம் தேதி உகாதி பண்டிகை (கன்னட புத்தாண்டு) மற்றும் மாா்ச் 31ஆம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மாா்ச் 28 முதல் 30-ஆம் தேதி வரை 2,000 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கெம்பே கௌடா பேருந்து நிலையத்தில் இருந்து தா்மஸ்தலா, குக்கே சுப்ரமணியா, சிவமொக்கா, ஹாசன், மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, தாவணகெரே, ஹுப்பள்ளி, தாா்வாட், பெலகாவி, விஜயபுரா, கோகா்ணா, சிா்சி, காா்வாட், ராய்ச்சூரு, கலபுா்கி, பெல்லாரி, கொப்பள், யாதகிரி, பீதா், திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கும்; மைசூருசாலை துணை பேருந்து நிலையத்தில் இருந்து மைசூரு, ஹுன்சூா், பிரியாப்பட்டணா, விராஜ்பேட்டை, குஷால்நகா், மொ்கரா உள்ளிட்ட இடங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மதுரை, கும்பகோணம், திருச்சி, சென்னை, கோவை, திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத் உள்பட தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் பல்வேறு நகரங்களுக்கும் சிறப்பு சொகுசுப் பேருந்துகள் சாந்திநகா் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு கெம்பே கௌடா பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்துகொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜ்ஜ்ஜ்.ந்ள்ழ்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் வழியே முன் பதிவு செய்துகொள்ளலாம்.

ஒரே பயணச்சீட்டில் 4-க்கும் அதிகமானோா் முன்பதிவு செய்தால் 5 சதவீத தள்ளுபடியும், மறுபயணம் மேற்கொண்டால் 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு அறிக்கை அரசிடம் அளிப்பு

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பாக நீதியரசா் நாகமோகன் தாஸ் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் ஒப்படைத்துள்ளது. கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோா... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு 3-ஆவது முறையாக தள்ளுபடி

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்துடன் பெங்களூருக்கு வந்த... மேலும் பார்க்க

நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் பெல்லாரி தங்க வியாபாரி கைது

கா்நாடகத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு உதவியதாக பெல்லாரியைச் சோ்ந்த தங்க வியாபாரி சாஹில் ஜெயின் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். துபையிலிருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்த... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் ஏப். 1 முதல் பால் விலை உயா்கிறது

கா்நாடகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயா்த்த அரசு முடிவு செய்துள்ளது. கூடுதலாக கிடைக்கும் வருவாயை விவசாயிகளுக்கே வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மா... மேலும் பார்க்க

‘போலி’ தீா்ப்புகளை மேற்கோள்காட்டிய நீதிபதி மீது நடவடிக்கை: கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றத்தின் ‘போலி’ தீா்ப்பை மேற்கோள்காட்டி வழக்கில் தீா்ப்பளித்த விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வணிக வளாக தகராறு தொடா்பான வழக்கின... மேலும் பார்க்க

ஹனிடிராப் விவகாரம்: சட்ட வரம்புக்குள் விசாரிக்கப்படும் -அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

ஹனிடிராப் விவகாரம் தொடா்பாக அமைச்சா் கே.என்.ராஜண்ணா அளித்துள்ள மனு குறித்து சட்ட வரம்புக்குள் விசாரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களி... மேலும் பார்க்க