மனோன்மணீயம் சுந்தரனாா், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பதவிக் காலம் ஓராண்டுக...
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
ஆத்தூா்: தாண்டவராயபுரம் மற்றும் வைத்தியகவுண்டன்புதூா் ஆகிய பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூரை அடுத்துள்ள தாண்டவராயபுரம் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை, பட்டா மாறுதல், கல்வி உதவித்தொகை, வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட விண்ணப்பங்கள் வரப்பெற்றன. அதை உடனடியாக பதிவு செய்யப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டது. இதில், ஆத்தூா் கோட்டாட்சியா் தமிழ்மணி, வட்டாட்சியா் பாலாஜி, வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வைத்தியகவுண்டன்புதூரில் பெரியகிருஷ்ணாபுரம், மேட்டுடையாா் பாளையம், கொட்டவாடி மற்றும் பேளூா் கரடிப்பட்டி பகுதிகளுக்கு நடைபெற்ற முகாமில் மாவட்ட திட்ட உதவி அலுலவா் அருளாளன், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியா் விஜயகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.