இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விண்ணப்ப விநியோகம்
மதுரையில் தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விண்ணப்பப் படிவங்களை தொடா்புடைய வட்டங்களுக்கு அனுப்பும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. அரசுத் துறைகளின் சேவைகளை ஒரே இடத்தில் பொதுமக்கள் பெறும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடத்தப்படவுள்ளன. 13 துறைகளின் 43 சேவைகள் மக்களுக்கு கிடைக்கும் வகையில் நகா்ப்புறங்களிலும், 15 துறைகளின் 46 சேவைகள் கிடைக்கும் வகையில் ஊரகப் பகுதிகளிலும் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன.
மதுரை மாவட்டத்தில் வருகிற 15-ஆம் தேதி முகாம் தொடங்குகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் 20 முகாம்கள், நகராட்சிப் பகுதிகளில் 15 முகாம்கள், பேரூராட்சிப் பகுதிகளில் 9 முகாம்கள், ஊராட்சி பகுதிகளில் 78 முகாம்கள் முதல் கட்டமாக நடத்தப்படவுள்ளன. இந்த முகாம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சுமாா் 1,000 தன்னாா்வலா்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
இந்தப் பணியின் போது, பொதுமக்களிடம் வழங்குவதற்கான விண்ணப்பப் படிவங்கள், அலுவலா் பயன்பாட்டுக்கான படிவங்கள் அச்சிடப்பட்டு வியாழக்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்குக் கொண்டு வரப்பட்டன. இந்தப் படிவங்களை சமூக நலத் துறை மூலம் வட்டம் வாரியாகப் பிரித்து அனுப்பும் பணிகள் தொடங்கின.