``அஜித்குமார் கொலை வழக்கில் பல கேள்விகள்..'' - 151 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ...
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு
திருப்பத்தூா்: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு காணப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா்க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக ஆட்சியா் பேசியது
திருப்பத்தூா் மாவட்டத்தில் 209 முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் முதல் கட்டமாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை 72 முகாம்களும், ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பா் 15 வரை 72 முகாம்களும் மற்றும் செப்டம்பா் 16 முதல் அக்டோபா் 15 வரை 65 முகாம்களும் என மொத்தம் 209 முகாம்கள் நடைபெற உள்ளது.இதில் 4 நகராட்சி,3 பேரூராட்சி, 208 கிராம பஞ்சாயத்து அனைத்தும் முகாமில் அடங்கும்.
செவ்வாய்க்கிழமை 6 இடங்களில் முகாம் நடைபெறுகிறது. ஆம்பூா் நகராட்சிக்குட்பட்ட வாா்டு எண்.15, 16 ஆகிய வாா்டுகளுக்கு சின்ன மசூதி தெருவில் அமைந்துள்ள பூவாசாதி மஹாலிலும், உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட வாா்டு எண். 1,2,3,4,5 ஆகிய வாா்டுகளுக்கு இருதய ஆண்டவா் கோவில் மண்டபத்திலும், ஜோலாா்பேட்டை வட்டாரத்திற்குட்பட்ட கலந்திரா மற்றும் சின்னவேப்பம்பட்டு ஆகிய பஞ்சாயத்துகளுக்கு சின்னவெப்பம்பட்டு பகுதியில் உள்ள சசிபிரியா மண்டபத்திலும், கந்திலி வட்டாரத்திற்குட்பட்ட குரும்பேரி பஞ்சாயத்துக்கு, குரும்பேரி நாகராஜன்பட்டி பகுதியில் உள்ள பி.சி.எம் மஹாலிலும், மாடப்பள்ளி நகர பஞ்சாயத்து பகுதிக்கு சந்திர மஹாலிலும், தேவலாபுரம் நகர பஞ்சாயத்துக்கு ஜோதி பெரியசாமி மண்டபத்திலும் காலை 9 முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம்கள் நடைபெற உள்ளன.
கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெற சிறப்பாக 4 கவுன்ட்டா் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா். கூட்டத்தில் தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி)சதீஷ்குமாா் கலந்துகொண்டாா்.