``அஜித்குமார் கொலை வழக்கில் பல கேள்விகள்..'' - 151 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ...
சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலக கட்டுவதற்கான இடம் ஆய்வு
ஆம்பூா்: ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தை பொதுப்பணித்துறை உதவி கோட்டப் பொறியாளா் ரவி ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது நகா்மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த் ராஜ், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், பிரமுகா்கள் ஹரீஷ், சிவபாண்டியன், சுரேந்தா் பாபு, ரவி ஆகியோா் உடனிருந்தனா்.