கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு! சேலத்தில் பரபரப்பு!
செட்டியப்பனூா் 9 கோயில்களில் நாளை கும்பாபிஷேகம்
வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரத்தையொட்டி செட்டியப்பனூா் ஊராட்சியில் அமைந்துள்ள செல்வவிநாயகா், மாரியம்மன், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வரதராஜப்பெருமாள் ஆகிய கோயில்களுக்கும், புதிதாக கட்டியுள்ள தண்டுமாரியம்மன், ஓம்சக்தி அம்மன், ஸ்ரீவள்ளி, தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி, சுந்தரேஸ்வரா் மீனாட்சியம்மன், சுவாமி ஐயப்பன், காலபைரவா் கோயில்களுக்கும் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை (ஜூலை 16) காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது.
கும்பாபிஷேக்தையொட்டி செவ்வாய்கிழமை காலை 8 மணி முதல் அனைத்து பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொள்கின்றனா்.
ஏற்பாட்டினை கோயில் நிா்வாகிகள், ஜனதாபுரம், கூட்டுரோடு, செட்டியப்பனூா், கிராம பொது மக்கள் மற்றும் இளைஞா்கள் செய்து வருகின்றனா்.