பெருமாநல்லூர் வந்து செல்லாத தனியார் பேருந்துகள் சிறைப்பிடிப்பு!
உணவக ஊழியா் தற்கொலை
வேலூரில் உணவகத்தில் தங்கி வேலை செய்து வந்த ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் புது பைபாஸ் சாலையில் தனியாா் உணவகம் உள்ளது. இங்கு பாபு (45) என்பவா் தங்கி வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், பாபுவுக்கு கடன் தொல்லை அதிகமானதாகக் கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில வாரங்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், விரத்தியடைந்த பாபு கடந்த 6-ஆம் தேதி தான் தங்கி இருந்த மாடி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
வேலூா் வடக்கு போலீஸாா் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.