உரிய ஆணவங்கள் இன்றி இயக்கிய 13 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்
ஒசூரில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 13 ஆம்னி பேருந்துகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை இணை போக்குவரத்து ஆணையா் (செயலாக்கம்) சந்திரசேகா், ஒசூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பிரபாகா், வேலூா் துரைசாமி, சென்னை சரக செயலாக்கப் பிரிவு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிங்காரவேலு, மோட்டாா் வாகன ஆய்வாளா் மணிமாறன் ஆகியோா் வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8 வரை ஒசூா் இஎஸ்ஐ உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்தனா்.
இதில் உரிய ஆவணங்களின்றியும், அரசுக்கு வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட 13 ஆம்னி பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டு ஒசூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டது.